search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவர் இடிந்து விழுந்தது"

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
    • 13 பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்

    செய்யாறு:

    மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட செய்யாறு வெம்பாக்கம் பகுதிகளை ஒ.ஜோதி எம் எல் ஏ நேரில் சென்று ஆய்வு செய்தார். செய்யாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பின்பகுதி சுற்றுச்சுவர் மழையின் காரணமாக முழுவதுமாக இடிந்து விழுந்தது உள்ளதை தகவல் அறிந்த ஒ.ஜோதி எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு சுற்றுச்சுவர்அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    பின்னர் செய்யாறு, வெம்பாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார். வெம்பாக்கம் தாலுகா, இருமரம் கிராமத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட 13 பழங்குடியின மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

    ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், தினகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வழக்கறிஞர் கே விஸ்வநாதன் உள்பட பலர் இருந்தனர்.

    • கடந்த சில நாட்களாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் பலத்தமழை பெய்தது.
    • இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர்.

    கடலூர்:  

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள டி.புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். அவரது மனைவி நிர்மலா (வயது 49). இவர்களது மகன் அய்யப்பன். கடந்த சில நாட்களாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் பலத்தமழை பெய்தது. இதன் காரண மாக சோமசுந்தரத்தின் வீடு மழையில் நனைந்திருந்தது. சம்பவத்தன்று சோமசுந்தரம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார்.

    அப்போது கனமழை காரணமாக வீட்டுசுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 3 பேரும் இடிபாடு களுக்குள் சிக்கினர். அவர்கள் வேதனையால் அலறிதுடித்தனர். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ள வர்கள் ஓடி வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிர்மலா நேற்று நள்ளிரவு இறந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து டி.புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோத்தகிரியில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
    • மண் சரிவுகள் ஏற்பட்டு சாலையில் மரங்களும் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையினால் பல பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலையில் மரங்களும் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் கோத்தகிரி சேட்லைன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு மண் சரிவு ஏற்பட்டு அருகில் இருந்த வீட்டின் சிமெண்ட் கூரையும் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இது போன்ற பாதிப்புகள் பல பகுதிகளில் ஏற்பட்டு வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.

    ×